கோப்பு படம். 
உள்ளூர் செய்திகள்

பெரியகுளம் அருகே பள்ளி மாணவி மாயம்

சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

பெரியகுளம்:

பெரியகுளம் அருகே இ.புதுக்கோட்டையை சேர்ந்தவர் ஜஸ்டன் திரவியம் மகள் பபிதா (வயது16). இவர் பெரியகுளத்தில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற பபிதா இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தார். எங்கும் கிடைக்காததால் தென்கரை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT