தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே உள்ள மேல்மங்கலம் ராஜகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் மகள் பிரியா (வயது 19). பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார்.
சம்பவத்தன்று பெரியகுளத்தில் உள்ள பள்ளிக்கு சென்று மாற்றுச் சான்றிதழ் வாங்கி வருவதாக கூறிச் சென்றார். ஆனால் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தாய் வீருசின்னு ஜெய மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.