உள்ளூர் செய்திகள்

டிசம்பர் 9-ந்தேதி சரத்குமார் வருகை-சமத்துவ மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம்

டிசம்பர் 9-ந்தேதி பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற உள்ளது. சரத்குமாருக்கு வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நெல்லை:

நெல்லையில் வருகிற டிசம்பர் 9-ந்தேதி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத் குமார் கலந்து கொள்கிறார். நெல்லை வரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோ சனை கூட்டம் மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர் அலுவலகத்தில் நடைபெற்றது.

நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சரத் ஆனந்த் வரவேற்று பேசினார். மாநில துணை பொதுச் செயலாளர் சுந்தர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை பொதுச் செயலாளர் ஈஸ்வரன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் விவேகானந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் செங் குளம் கணேசன், இளை ஞரணி துணை செயலாளர் குரூஸ் திவாகர், மகளிர் அணி துணை செயலாளர் ஜெயந்திகுமார், மாநில மாணவர் அணி துணை செயலாளர் நட்சத்திர வெற்றி, கலை இலக்கிய அணி துணைச் செயலாளர் அமலன், விவசாய அணி துணை செயலாளர் எட்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முடிவில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் ஜெபஸ்டின் நன்றி கூறி னார்.

இதில் மாவட்ட செயலா ளர்கள் தங்கராஜ், அரசன் பொன்ராஜ், வில்சன், தயாளன், பாஸ்கரன், ஜெய ராஜ், ஸ்டார்வின் தாஸ், பாபு, பிரபு, சிவஞான குரு நாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தென் மண்டலத்திற்கு உட்பட்ட மாநில, மாவட்ட செயலாளர்கள், பாராளு மன்ற, சட்டமன்ற தொகுதி செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, பேரூர், நகராட்சி, பகுதி செயலாளர்கள், அணி செய லாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திரளா னோர் கலந்து கொண்டனர்.