உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே மணல் திருடியவர் கைது

பண்ருட்டி அருகே மணல் திருடியவர் கைது செய்யப்பட்டார். போலீசாரை கண்டதும் டிரைவர் தப்பி ஓட முயன்றார்.

மாலை மலர்

கடலூர்: 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பைத்தாம்பாடி தென் பெண்ணை ஆற்று பகுதியில் லாரியில் மணல் கடத்துவதாக புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், தனிபிரிவு ஏட்டு ஜனார்த்தனன் ஆகி யோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று நின்று கொண்டிருந்த மினி லாரியை சோதனை செய்தனர். போலீசாரை கண்டதும் டிரைவர் தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கி பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர். அவர் அவியனூர் கிராமத்தை சேர்ந்த சஞ்சீவி (வயது 40) என்பதும், ஆற்று மணலை திருடி விற்று வருவதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் மினி லாரியை பறிமுதல் செய்தனர்.