உள்ளூர் செய்திகள்

கரும்பாலை அருகே சென்டர் மீடியனில் மோதி வாலிபர் சாவு

சேலம் கரும்பாலை அருகே சென்டர் மீடியனில் மோதி வாலிபர் சாவு

மாலை மலர்

சேலம்,

சேலம் கருப்பூர் 14வது வார்டு பகுதியை சேர்ந்தவர் தேவராஜன் (வயது 40). இவர் நேற்று இரவு 11 மணி அளவில் வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். 

கரும்பாலை அருகே சென்றபோது  எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் அவரது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில்  கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்ட தேவராஜன் வலியால் கதறினார். அக்கம் பக்கத்தினர்  அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.