உள்ளூர் செய்திகள்

அயோத்தியாப்பட்டணத்தில் வீட்டின் சுவர் இடிந்து தொழிலாளி பலி

அயோத்தியாப்பட்டணத்தில் வீட்டின் சுவர் இடிந்து தொழிலாளி பலியானார்.

சேலம்:

அயோத்தியாப்பட்டணம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் வெங்கட்டன். இவர் தனது பழைய வீட்டை இடித்து விட்டு புதிதாக வீடு கட்ட முடிவு செய்தார். இதற்காக அயோத்தியாப்பட்டணம் மலையன் நகரை சேர்ந்த தொழிலாளி செல்வம் (வயது 45) என்பவர் பழைய வீட்டின் சுவரை இடிக்கும் பணியில் ஈடுபட்டார்.

 அப்போது எதிர்பாராதவிதமாக சுவர் அவர் மீது இடிந்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த செல்வத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு மின்னாம்பள்ளி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.