மூதாட்டிக்கு உதவி செய்த கமிசனர். 
உள்ளூர் செய்திகள்

மனித நேயத்துடன் உதவி செய்த போலீஸ் கமிஷனர்

மூதாட்டிக்கு உதவி செய்த போலீஸ் கமிஷனர்

மாலை மலர்

அன்னதானப்பட்டி:

சேலம் மாநகர காவல் துறை சார்பில் போலீஸ் நடைபயண ரோந்து தினமும் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக   சேலம் பிரபாத் - தாதகாப்பட்டி சிக்னல் பகுதியில் இருந்து தாதகாப்பட்டி கேட் வரை  பூட் பேட்ரோல் நடைபயண ரோந்து  நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா தலைமை தாங்கி  அப்பகுதியில் நடந்து சென்று அங்குள்ள  பொதுமக்கள், சாலையோர சிறு வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். 

மேலும் மக்கள் அச்சமின்றி பொது வெளியில் நடமாடுவும், தொழில் செய்வதை உறுதிப்படுத்தும் வகையில்  அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கினார்.      

அப்போது தாதகாப்பட்டி பில்லுக்கடை , ஸ்டேட் வங்கி எதிரே,   திருச்சி பிரதான சாலையில் மூதாட்டி ஒருவர் பரிதாபத்துடன்  அமர்ந்து கொண்டிருந்தார்.

 அதனை கவனித்த போலீஸ் கமிஷனர் மூதாட்டி அருகே சென்று அவரது குறைகளை கேட்டறிந்தார். மேலும் தன்னிடம் இருந்து ரூ.1000 பணத்தை மூதாட்டிக்கு செலவுக்கு கொடுத்தார். 

தொடர்ந்து அவருக்கு தேவையான வசதிகளை செய்து தருமாறு போலீ சாருக்கு உத்தரவிட்டார். போலீஸ் கமிஷனரின் இந்த மனித நேயத்துடன் கூடிய உதவிக்கு அங்கிருந்த பொதுமக்கள், மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

 இதில் உதவி கமிஷனர்கள் மோகன்ராஜ், மாடசாமி, உதவி ஆணையர் ( நுண்ணறிவு பிரிவு)சரவணன்,  உதவி ஆணையர் (அன்னதானப்பட்டி) அசோகன், இன்ஸ்பெக்டர் (அன்னதானப்பட்டி) சந்திரகலா, காவல் துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.