. 
உள்ளூர் செய்திகள்

நகர்புற ஊரமைப்பு அதிகாரி பணிக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

நகர்புற ஊரமைப்பு அதிகாரி பணிக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சேலம்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் தமிழ்நாடு பொதுப் பணிகளில் அடங்கிய நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பதவிக்கான எழுத்துத் தேர்வு வருகிற 28-ந் தேதி முற்பகல், பிற்பகல் என இரண்டு வேளைகளில் சென்னை, மதுரை மற்றும் கோயம்பத்தூர் மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. 

விண்ணப்பதாரர்கள்  பயனாளர் ஐடி, கடவுச்சொல்  கொடுத்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SCROLL FOR NEXT