உள்ளூர் செய்திகள்

சேலம் ரெயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்

சேலம் ரெயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது.

மாலை மலர்

சேலம்:

சேலம் ரெயில் நிலையத்தில் முதலாவது பிளாட்பார்ம் வடக்கு பகுதியில் ஜோலார்பேட்டை ரெயில் நிற்கும் இடத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது. 

இதுபற்றி தகவல் கிடைத்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

 பிணமாக கிடந்தவருக்கு சுமார் 65 வயது இருக்கும். அவர்  அவர் சாம்பல் நிற முழுக்கைச் சட்டையும் வெள்ளை கலரில் கட்டம் போட்ட லுங்கி அணிந்திருந்தார். 

அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.