உள்ளூர் செய்திகள்

அடையாளம் தெரியாத ஆண் பிணம்

கொண்டலாம்பட்டியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

சேலம்:

சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா நாமக்கல் பஸ் நிறுத்தத்தில் தனியார் மருத்துவமனை அருகே 65 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது.

 இதுபற்றி ஜாரி கொண்டலாம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி கொண்டலாம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

 போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் நடத்திய  விசாரணையில் பிணமாக கிடந்தவர் வெங்கடேஷ் என்பது  தெரிய வந்தது.

 அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.