உள்ளூர் செய்திகள்

50 ஆயிரம் பேருக்கு நாளை தடுப்பூசி செலுத்த ஏற்பாடு

சேலத்தில் 50 ஆயிரம் பேருக்கு நாளை தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்துள்ளது.

மாலை மலர்

சேலம்:

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி பெருமுகாம் நாளை  காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 200 மையங்களில் நடைபெறுகிறது. இம்மையங்கள் மூலம் 50 ஆயிரம் பேருக்கு   தடுப்பூசி செலுத்த  மாநகராட்சி நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. 

175 வாக்குச்சாவடி மையங்களிலும், 16 நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையங்கள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையம், மற்றும் நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் என 200 மையங்களில்  கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

சேலம் மாநகராட்சிப் பகுதியில் முதல் தவணை தடுப்பூசியே செலுத்திக் கொள்ளாதவர்கள் 1,30,294 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். அவர்களில்  இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியிருந்தும் தடுப்பூசி செலுத்திகொள்ளாதவர்கள் 94,714 பேர் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 

விடுபட்டுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திகொள்ள மாநகராட்சி நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளது.