சேலம்,
சேலம் நான்கு ரோடு பகுதியை சேர்ந்தவர் குமாரவேல் (வயது 25). இவரை கடந்த 2020-ம் ஆண்டு சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஜாமீனில் வெளியே வந்த குமரவேல் கடந்த சில மாதங்களாக இந்த வழக்கில் சேலம் போக்சோ கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார். இதைத் தொடர்ந்து நீதிபதி, குமரவேலை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று காலை சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசார் குமரவேலை கைது செய்தனர்.