சேலம்:
சேலம் ஓமலூர் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார். கூலித்தொழிலாளி. இவரது மனைவி எஸ்தர் (வயது 22 ).
இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிலிருந்து ஆஸ்பத்திரிக்கு எஸ்தரை அழைத்து சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே ஆம்புலன்ஸ் வைத்து ஆண் குழந்தை பிறந்தது.
தாயும், சேயும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் டிரைவர் சுரேஷ், உதவியாளர் சவுந்தர்யா ஆகியோர் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். இருவரும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.