உள்ளூர் செய்திகள்

மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை

சேலத்தில் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சேலம்:

சேலம் அருகே உள்ள  வேம்படிதாளம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் குருசங்கர் (வயது40). குடும்பத்தகராறு காரணமாக  இவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.

தனியாக வசித்து வந்த இவர் இன்று காலை வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைக்கண்ட இவரது மகன் கொடுத்த தகவலின் பேரில் கொண்டலாம்பட்டி  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து குருசங்கர் தற்கொலைக்கு  வேறு ஏதும் காரணம் உள்ளதா என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். 

SCROLL FOR NEXT