வாழப்பாடி:
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து, நேற்று விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.சி-52 ராக்கெட் சீறிப் பாய்ந்து சென்ற காட்சி, வாழப்பாடி பகுதியில் தெளிவாக தெரிந்தது.
இந்த காட்சியை மக்கள் கண்டு மகிழ்ந்ததோடு, படம் பிடித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
வெற்றிகரமாக ராக்கெட்டை விண்ணில் செலுத்திய ஆய்வு மைய விஞ்ஞானிகள் குழுவுக்கு, இளைஞர்கள் மாணவர்கள் பலரும் சமூக ஊடகங்களில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.