காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த கணவாய் புதூர் ஊராட்சி லோகூர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (48). கூலி தொழிலாளி.
இவர் நேற்று இரவு மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி செல்லும்போது மோரூர் லேண்ட் காலனி விநாயகர் கோவில் அருகில் கீழே விழுந்த£ர்.
உடனே அவரை உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே இறந்து விடுகிறார்.
இந்த சம்பவம் குறித்து தீவட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.