பிணமாக கிடந்த முதியவர் 
உள்ளூர் செய்திகள்

உடையாப்பட்டியில் மயங்கி விழுந்தவர் திடீர் சாவு

சேலம் உடையப்பட்டியில் 45 வயது மதிக்க ஆண் ஒருவர் மயங்கி விழுந்தவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாலை மலர்

சேலம்:

சேலம் உடையாப்பட்டி மாரியம்மன் கோவில் பஸ் ஸ்டாப் அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் கடந்த 12- ந் தேதி மயங்கி கிடந்தார். 

இதுகுறித்து அந்த பகுதி வி.ஏ.ஓ. வேலுமணி அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். 

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் அவர்  சிகிச்சை பலனின்றி கடந்த 13-ந் தேதி மாலை இறந்து விட்டார். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.