விவசாய சங்கத்தினர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

காவிரி நீரில் ஆலைக் கழிவு நீர் கலப்பதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும்

காவிரி நீரில் ஆலைக் கழிவு நீர் கலப்பதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் பேட்டி.

மாலை மலர்

சேலம்:

விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அழகாபுரத்தில் நடந்தது. அப்போது விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் நிருபர்களிடம்  கூறியதாவது:-

 சேலம் முதல் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலைக்கு இடம் கொடுத்த விவசாயிகளுக்கு வீடு, நிலம் என மாற்று இடம் வழங்க வேண்டும்.ஏற்கனவே சேலம் -சென்னை 8 வழி பாதை திட்டத்தை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். அப்போது விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்த திமுக அரசு தற்போது அந்த திட்டத்தின் பெயரை மாற்றி விரைவுச்சாலை என்று கூறி அதே திட்டத்தை செயல்படுத்த முயற்சிப்பதாக தெரிகிறது. இதை எதிர்க்கும் விவசாயிகளை அதிகாரிகள் கொண்டு மிரட்டுவது, பொய் வழக்கு போடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டமன்றம் முன்பு தொடர் போராட்டம் நடத்தப்படும்.

பல லட்சம் மக்கள் குடிநீராக பயன்படுத்த காவிரி நீரில் ஆலைக் கழிவு நீர் கலப்பதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும். சேலம், நாமக்கல் மாவட்டத்தில் ஸ்டார்ச் ஜவ்வரிசி தயாரிக்கும் ஆலைகளில் பயன்படுத்தப்படும் தண்ணீரை சுத்திகரிக்காமல் அப்படியே கழிவு நீராக வெளியேறுவதால் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுகிறது.விவசாயிகள் உற்பத்தி செய்யும் பால் சத்துணவில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.