உள்ளூர் செய்திகள்

இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த இளம்பெண்ணை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த இளம்பெண்ணை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அத்திக்கட்டானுர் பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. 

இந்த முகாமில் வசித்து வருபவர் கலைவதனி (வயது 39). இவருக்கும் அதே முகாமை சேர்ந்த சுவேந்திரகுமார் (34) என்பவருக்கும் கடந்த 5 வருடமாக பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குடிபோதையில் சுவேந்திரகுமார், கலைவதனியை தகாத வார்த்தையால் திட்டி அடித்து உதைத்துள்ளார்.

காயமடைந்த கலைவதனி ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில்  சேர்ந்தார். அவர்  கொடுத்த வாக்குமூலத்தின்படி தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி  சுவேந்திரகுமார் மீது வழக்கு பதிவு செய்தனர்.