உள்ளூர் செய்திகள்

கள்ளக்காதலை கண்டித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

சேலத்தில் கணவர் கள்ளக்காதலை கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

சேலம்:

சேலம் அம்மாபேட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் மோகன்பாபு, (வயது 45). இவரது மனைவி பரிமளா (32). இவர் பிரவீன்குமார் என்பவருடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இது நாளடைவில் கள்ள தொடர்பாக மாறியது. 

இதை அறிந்த மோகன்பாபு, தனது மனைவி பரிமளாவை பலமுறை கண்டித்துள்ளார். மேலும் அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார், பிரவீன் குமாரை அழைத்து எச்சரித்து அனுப்பினார்கள்.

இந்த நிலையில் மோகன்பாபு நேற்று வேலைக்கு சென்றிருந்த சமயத்தில் வீட்டில் தனியாக இருந்த பரிமளா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த தகவலின் பேரில் அம்மாபேட்டை போலீசார்  சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு  சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.