சேலம்:
தமிழ்புத்தாண்டை யொட்டி சேலத்தில் கோவில்களில் இன்று அதிகாலை முதலே நடைகள் திறக்கப்பட்டன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
சேலம் மாநகரில் அனைத்து கோவில்களிலும் அதிகாலையிலே நடை திறக்கப்பட்டு சிற்ப்பு பூஜைகள் நடந்தது. இதில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இதே போல சேலம் புறநகரில் பெரும்பாலான கோவில்களில் அதிகாலையிலே நடை திறக்கப்பட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். சித்திரை புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள், அன்னதானம், நீர் மோர், சர்க்கரை பொங்கல் உள்பட பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் பல கோவில்களில் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் கூட்டத்தை ஓழுங்கு படுத்தினர். அசம்பாவித சம்பவங்களைத தவிர்க்க போலீசார் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டனர்.
நாமக்கல் நகரின் மையத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஞ்சநேயர் கோவிலில் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு சாமிக்கு வடை மாலை அலங்காரம், அபிசேகம் நடைபெற்றது. தொடர்ந்து, தங்க கவசம் சாற்றப்பட்டது.