வாழப்பாடி:
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த அனுப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி (வயது 44). இதே பகுதியில் இவர் மளிகை கடை வைத்துள்ளார். இந்த மளிகை கடைக்கு முன்பாக வைத்திருந்த கண்காணிப்பு காமிராவை மர்மநபர் சேதப்படுத்தினார்.
காமிரா சேமிப்பு கருவியை ஆய்வு செய்தபோது, அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர் திருமூர்த்தி (27) என்பவர் காமிராவை உடைத்தது தெரியவந்தது.
இதனால் ஆசைத்தம்பி அவரிடம் தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வாலிபர், அப்படித்தான் காமிரவை சேதப்படுத்துவேன் எனக்கூறி, ஆசைத்தம்பிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆசைத்தம்பி காரிப்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து வாலிபர் திருமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.