உள்ளூர் செய்திகள்

2 குழந்தைகளின் தாய் தற்கொலை

சேலம் கன்னங்குறிச்சியில் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்துகொண்டார்.

மாலை மலர்

சேலம்,

சேலம் கன்னங்குறிச்சி கொத்துக்கார தெருவை சேர்ந்தவர் முனியப்பன். ஆட்டோவில் வைத்து பூண்டு வியாபாரம் செய்து வந்தார். இவருக்கும் அஞ்சலி (வயது 33) என்பவருக்கும்   18 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது  விமல் (11), கோபிகா (8) என்ற மகனும் உள்ளனர். 

இந்த நிலையில் முனியப் பனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கிடையே  அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த அஞ்சலி இன்று காலை வீட்டில்   தூக்கு போட்டு    தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர்.

தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரது   உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம்   அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும்   இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் முனியப்பன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.