லாரியில் பிடித்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

சேலம் அருகே கண்டெய்னர் லாரியில் திடீர் தீ

வெளிமாநிலத்தில் இருந்து சரக்குகளை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி சேலம் அருகே வந்தபோது திடீரென்று தீப்பிடித்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மாலை மலர்

வாழப்பாடி:

சேலம் அருகே அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த சின்னகவுண்டாபுரம் கிராமத்தில் லாரிகளில் பார்சல் அனுப்பும் தனியார் நிறுவனத்தின் குடோன் இயங்கி வருகிறது. 

சூரத்தில் இருந்து நேற்று இந்த  குடோனுக்கு பொருட்களை ஏற்றி வந்த ஒரு கண்டெய்னர் லாரியில் திடீரென தீப்பற்றியது.

இதனைக்கண்ட நிறுவன பணியாளர்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு விரைந்து வந்த தீயணைப்பு  துறை வீரர்கள் தீயை அணைத்தனர்.

கண்டெய்னரில் வைக்கப்பட்டிருந்த ரூ.27 லட்சம் மதிப்புள்ள பார்சல் பொருட்கள் தீயில் கருகி நாசமானது. 

இந்த தீ விபத்து குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.