உள்ளூர் செய்திகள்

வகுப்பறையில் மின்விசிறி விழுந்து மாணவன் காயம்

தாதகாப்பட்டி அரசு பள்ளி வகுப்பறையில் மின்விசிறி விழுந்து மாணவன் காயம்

மாலை மலர்

அன்னதானப்பட்டி:

சேலம் தாதகாப்பட்டி சீரங்கன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் அபினேஷ் (வயது 13). இவர்  தாதகாப்பட்டி சஞ்சீவிராயன்பேட்டை பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 5-&ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அபினேஷ் வழக்கம்போல பள்ளிக்கு சென்றான்.

மதியம் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டி ருக்கும் போது    மின்விசிறி  திடீரென கழன்று அபினேஷ்  தலையில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவனுக்கு  தலை நெற்றி பகுதியில் காயம் ஏற்பட்டது.

 இதையடுத்து ஆசிரியர்கள்,  அருகில் இருந்தவர்கள் அவனை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.  அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 இது குறித்து அன்னதா னப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.