சேலம்:
ரெயில்களில் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ரெயில்வே நிர்வாகம் கோடைகால சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது.
அதன்படி தாம்பரம் - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் (06019) 22-ந் தேதி முதல் ஜூன் 24- ந் தேதி வரை வெள்ளிக்கிழமைதோறும் இயக்கப்படுகிறது.
தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து 22-ந் தேதி மதியம் 3 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இரவு 9.48 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 9.50 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், அலுவா வழியாக மறுநாள் காலை 5 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
இதேபோல் மறுமார்க்கத்தில் எர்ணாகுளம்- தாம்பரம் வாராந்திர அதிவிரைவு ரெயில் (06020) 24- ந் தேதி முதல் ஜூன் மாதம் 26-ம் தேதி வரை ஞாயிறுதோறும் இயக்கப்படுகிறது. எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு அலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக திங்கட்கிழமை காலை 6.03 மணிக்கு சேலம் வந்தடையும்.
இங்கிருந்து 6.05 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர் வழியாக மதியம் 12.15 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.