சேலம்:
சேலம் அம்மாபேட்டை சித்திவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கதிரேசன் (வயது 53). இவரது செல்போன் எண்ணுக்கு பான் எண்ணை இணைக்காவிட்டால் தங்களது வங்கி கணக்கு முடக்கம் செய்யப்-படும், இதனை தவிர்க்க கீழே உள்ள லிங்கை பூர்த்தி செய்து அனுப்பும்படி குறுந்தகவல் வந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து கதிரேசன் வங்கி தொடர்பான அனைத்து தகவல்களையும் பதிவேற்றம் செய்துள்ளார்.அடுத்த சில விநாடிகளில் கதிரேசன் வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 69 ஆயிரத்து 991 எடுக்கப்பட்ட-தற்கான குறுந்தகவல் வந்துள்-ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கதிரேசன் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.