கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்கள். 
உள்ளூர் செய்திகள்

ரெயிலில் கடத்தப்பட்ட 3 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் ரெயிலில் கடத்தப்பட்ட 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:

சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், பயணிகள் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் சேலம் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். 

இன்று அதிகாலை ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து ஆழப்புழா செல்லும் ரெயிலில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது எஸ் -10 முன்பதிவு பெட்டியில் சோதனை செய்தபோது கேட்பாரற்று கைப்பை கிடந்தது.

இந்த கைப்பையை போலீசார் திறந்து பார்த்தனர். அதில் 3 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

அதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த நபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT