சேலம்:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (30). இவர் சேலம் டவுனில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 14-ம் தேதி சேலம் டவுன் மேட்டு அக்ரஹாரம் சாலையோரத்தில் ரத்த காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து சுரேஷின் தந்தை சுப்பிரமணி தனது மகனை யாரோ அடித்துக் கொன்று விட்டார்கள் என்று கொடுத்த புகாரின் பேரில் சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
சந்தேகத்தின்பேரில் ஆட்டோ டிரைவரான சிவதாபுரம், ஆண்டிப்பட்டி, பனங்காடு, பகுதியை சேர்ந்த மணிகண்டன் (32) என்பவரை பிடித்து விசாரிக்கையில் கள்ளக்தொடர்பு காரணமாக சுரேஷ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
மணிகண்டன் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
டீ மாஸ்டர் சுரேஷ் ஓமலூரில் வேலை பார்த்தார். அப்போது எனது மனை விக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் எனது மனைவியை கண்டித்தேன். மேலும் சுரேசையும் சத்தம் போட்டேன். ஆனால் அவர் கேட்கவில்லை. பலமுறை கண்டித்தும் சுரேஷ் கேட்காததால் எனக்கு கோபம் ஏற்பட்டது.
மேலும் எனது மனைவியும் கோபித்துக் கொண்டு என்னை விட்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். நான் சமாதானம் பேசி அவரை வீட்டிற்கு அழைத்து வந்தனர். டீ மாஸ்டர் சுரேஷ் எனது மனைவியுடன் பழக்கம் தொடர்ந்தார். இதையடுத்து அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். சம்பவத்தன்று காலை டவுன் ரெயில் நிலையம் அருகில் இருக்கும் டீ கடைக்கு வந்தேன்.
அங்கு நின்று கொண்டிருந்த சுரேஷ்-ஐ தாக்கினேன். அப்போது தப்பி ஓடும்போது ஆட்டோவை கொண்டு மோதினேன். இதில் அவர் சக்கடையில் கீழே விழுந்தார். பின்னர் கல்லை எடுத்து அவரது தலையில் போட்டு கொலை செய்தேன். இவ்வாறு வாக்குமூலத்தில் மணிகண்டன் கூறியதாக தெரிகிறது.