உள்ளூர் செய்திகள்

சேலம் மத்திய சிறை கைதி ஆஸ்பத்திரியில் அனுமதி

சேலம் மத்திய சிறை கைதிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம்:

சேலம் சீலநாயக்கன்பட்டி இபி காலனி பகுதியை சேர்ந்த செல்வகுமார், (வயது 39).  இவர் கடந்த ஆண்டு ஆள் கடத்தல் வழக்கில் சேலம் மாவட்டம் தொளசம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு  போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று காலை செல்வகுமாருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறை வார்டன்கள்   அவரை ஜெயில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ மனையில் இன்று காலை  11.15 மணி அளவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.