சேலம்:
சேலம் கிருஷ்ணம்மாள் நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர நீட் தேர்வு எழுதினார். இதில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்த நிலையில் இவரது செல்போன் எண்ணிற்கு டெல்லியைச் சேர்ந்த ஹர்ஷவர்தன் என்ற நபர் எஸ்எம்எஸ் அனுப்பி கர்நாடகா மற்றும் ஆந்திராவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் டிரஸ்டி மூலம் இலவசமாக சீட் வாங்கித் தருவதாக தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மாணவி, அந்த நபரை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் அனந்தபூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் ஒதுக்கீடு செய்து தருவதாகவும், அதற்கு அட்மிசன் தொகை ரூபாய் 6 லட்சத்தை உடனே தனது வங்கிக் கணக்கிற்கு அனுப்பும்படி கூறியுள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய மாணவி அந்த வாங்கி கணக்கிற்கு பணத்தை பரிமாற்றம் செய்துள்ளார். பின்னர் செல்போனில் தொடர்பு கொண்டபோது அந்த நபரின் செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.