எடப்பாடி:
எடப்பாடி அருகே உள்ள கோணசமுத்திரம் அரசன் குட்டை ஏரி பகுதியில் சோளத்தட்டு பயிரிடப்பட்டு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதனால் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி வருவாய்த்துறையினர் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று தாசில்தார் விமல் பிரகாசம், மண்டல துணை தாசில்தார் மகேந்திரன், வருவாய் ஆய்வாளர் நதியா, கிராம நிர்வாக அலுவலர் அன்புமணி மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றினர்.