மேட்டூர்:
சேலம் மாவட்டத்திதல் கடந்த நில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் ெதாடர்ச்சியாக நேற்றிரவு கொளத்தூர் ,மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறைக்காற்று, இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
மரங்கள் சாய்ந்தன
மேச்சேரி அருகே உள்ள மல்லிகுந்தம் சாலையில் 5க்கும் மேற்பட்ட புளியமரங்கள் காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சாலையில் சாய்ந்து விழுந்தன. தகவலறிந்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்–துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சாலையில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி–செய்தனர்.
தாரமங்கலத்தில் இரவு பெய்த கனமழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 100 ஆண்டு பழமையான புளியமரம் வேரோடு சாலையில் சாய்ந்தது. அப்போது அந்த வழியாக இருசக்கரவாகனத்தில் சென்ற சிக்கம்பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (40) என்பவர் தலையில் அடிபட்டு காயம் அடைந்தார்.
மேலும் தொட்டியனுர் பகுதியை சேர்ந்த சேகர் (42) என்பவர் கீழே பைக்கை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டநிலையில் பைக் மரத்தடியில் சிக்கியது. சேகர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி தலைவர் குணசேகரன், ஆணையாளர் மங்கையர்கரசன், வி.ஏ.ஓ. சுசீலா ஆகியோர் மரத்தை பொக்லைன் எந்திர உதவியுடன் அகற்றினர்.
எடப்பாடி மற்றும் சுற்று வட்ட ார பகுதியில் நேற்றிரவு 9 மணிமுதல் 10 மணி வரை ஒரு மணி நேரம் மழை பெய்தது. இந்த மழையால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. கடந்த 2 நாட்களாக எடப்பாடி பகுதியில் பெய்த மழையால் கோடை உழவு பணியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் அதிக பட்சமாக மேட்டூரில் 22.4 மி.மீ. மழை பெய்துள்ளது. எடப்பாடியில் 12.2, சங்ககிரியில் 7.1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 41.7 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடதக்கது.