உள்ளூர் செய்திகள்

தம்மம்பட்டி, கெங்கவல்லியில் சூறைக்காற்றுடன் மழை

தம்மம்பட்டி, கெங்கவல்லியில் பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

மாலை மலர்

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன  மழை பெய்தது.  

கனமழை குறிப்பாக தம்மம்பட்டி,  கெங்கவல்லி பகுதிகளில் சூறைக்காற்றுடன்   கன மழை பெய்தது. இந்த மழையால்  மரங்கள் சாய்ந்தன. சாலைகளில் தண்ணீர் பெ ருக்கெடுத்து    ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.  

கோடை காலத்தில் பெய்த இந்த மழையால்  வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.  மாவட்டத்தில் அதிகபட்சமாக தம்மம்பட்டியில் 25 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. 

கெங்கவல்லி 15, ஏற்காடு 10, வீரகனூர் 3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 53 மி.மீ. மழை பெய்துள்ளது.