சேலம்:
சேலம் மாநகராட்சி அவசர கூட்டம் இன்று கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தமிழக அரசின் சொத்து வரி உயர்வுக்கு அனுமதி அளிப்பது உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வைச் சேர்ந்த கவுன்சிலர்கள் கருப்பு உடை அணிந்து வந்தனர். கே.சி.செல்வராஜ், யாதவ மூர்த்தி, ஜனார்த்தனன், சசிகலா, மோகனப்பிரியா, சந்திரா ஆகியோர் தமிழக அரசை கண்டித்து துண்டு பிரசுரம் வைத்து கோஷமிட்டனர்.
பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து அவர்கள் கூறுகையில், 3 மடங்கு அதிக-மாக வரி விதித்-துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்-படுவார்கள். இது தேர்தல் வாக்குறுதியை மீறிய செயல் என்றனர்.