உள்ளூர் செய்திகள்

துணை மின் நிலையத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க 3-வது மின்மாற்றி அமைப்பு

கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க 3-வது மின்மாற்றி அமைக்கப்பட்டது.

மாலை மலர்

சேலம்:

சேலம் மின் பகிர்மான வட்டத்தில் சேலம் மேற்கு பகுதியில் கந்தம்பட்டி துணை மின் நிலையம் உள்ளது. இங்கு நகர் பகுதிக்கு  2 மின் மாற்றி  மூலம்  மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த 2 மின் மாற்றிகளும் உயர்ந்தபட்ச மின் பளுவை அடைந்து விட்டதால் அவற்றை மாற்றி கோடை காலத்திலும் மின்தேவை அளிக்கும் வகையில் 3-வது மின்மாற்றி அமைக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். 

அதன்படி போர்க்கால அடிப்படையில் 3-வது மின்மாற்றி அமைக்கும் பணிகள் நிறைவடைந்தது. இந்த மின்மாற்றியில் சர்க்கார் கொல்லப்பட்டி, பெருமாம்பட்டி ஆகிய 2 புதிய பீடர்கள் இணைக்கப்பட்டுள்ளன.

 இதன்மூலம் 30 ஆயிரம் மின் நுகர்கர்வோர் பயன் அடைவார்கள், சேலாம் மநகரத்தில் சீரான தடையில்லா மின்சாரம் வழங்க இயலும் என்று சேலம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.