சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் பூமாரியம்மன். 
உள்ளூர் செய்திகள்

அரியாம்பாளையம் பூமாரியம்மன் திருவீதி உலா

அரியானூரை அடுத்துள்ள அரியாம்பாளையம் பூமாரி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

மாலை மலர்

ஆட்டையாம்பட்டி, 

வீரபாண்டி ஒன்றியம் அரியானூரை அடுத்துள்ள அரியாம்பாளையம் பூமாரி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பூமாரி அம்மன் பல்வேறு வீதிகள் வழியாக பவனி ஊர்வலம் நடைபெற்றது.

அரியாம்பாளையம் மாரியம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய ஊர்வலம் ரெயில்வே ஸ்டேஷன் வழியாக அரியானூர், சங்ககிரி மெயின்ரோடு, திருச்செங்கோடு மெயின் ரோடு உள்பட பல்வேறு வீதிகளுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

ஆங்காங்கே பக்தர்கள் தேங்காய் பழம் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.