போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார் 
உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் 3.66 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

சேலம் மாவட்டத்தில் 3.66 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியை கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.

மாலை மலர்

சேலம் மாநகராட்சி குமாரசாமிப்பட்டி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.  அப்போது மாநகராட்சி ஆணையாளர்.கிறிஸ்துராஜ், துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணி) டாக்டர் நளினி, டாக்டர் ஜெமினி, மாநகர நகர் நல அலுவலர் யோகானந்த் ஆகியோர் உடனிருந்தனர்.

குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து  நிலையங்கள், ரெயில் நிலையங்கள்,  சோதனைச்  சாவடிகள்  போன்ற பயண வழி மையங்களில்  கோவிட் -19 நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலை பின்பற்றி சொட்டு மருந்துகள் வழங்கப்பட்டன.

நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை தூரம் மற்றும் எளிதில் செல்லமுடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  

போலியோ சொட்டு மருந்து முகாமில் 3,500-க்கு மேற்பட்ட சுகாதார  பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுப்படுத்தப்பட்டனர்.