உள்ளூர் செய்திகள்

வீரர், வீராங்கனைகள் கட்டணங்களை ஏ.டி.எம். கார்டு மூலம் செலுத்த ஏற்பாடு

சேலம் விளையாட்டு மைதானத்தில் வீரர், வீராங்கனைகள் கட்டணங்களை ஏ.டி.எம். கார்டு மூலம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

சேலம்:

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்த்தில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான உறுப்பினர், சந்தா கட்டணம் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்ததுவதற்கான கட்டணம், விளையாட்டரங்கம் மற்றும் 

அரசு நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி மற்றும் தினசரி பயிற்சி, சந்தா கட்டணம், மாதாந்திர சந்தா கட்டணம், காலாண்டு சந்தா கட்டணம், அரையாண்டு சந்தா கட்டணம் மற்றும் வருடாந்திர சந்தா கட்டணம், கோடைகால நீச்சல் கற்றல் பயிற்சி சந்தா கட்டணத்தொகை ஆகியவை வசூலிக்கப்படுகிறது.

இவை அனைத்தும் ஏ.டி.எம். கார்டு மற்றும் யு.பி.ஐ. கோடு மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே சந்தா கட்டணம் செலுத்த வருபவர்கள் ஆதார் எண் எடுத்துவர வேண்டும். 

இவை அனைத்தும் இன்று முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது என சேலம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன் தெரிவித்துள்ளார்.