சேலம்:
டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை கடைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளும் பொழுது ஒரு தலைபட்சமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில்லறை விற்பனை கடைகளுக்கு சரக்கு கொள்முதல் செய்வதற்கு மேற்பார்வையா ளர்கள் மூலமாக இண்டன் கொடுக்கப்படுகிறது. அலுவலகத்தில் செல்வாக்கு உள்ள மேற்பார்வையாளர் களுக்கு மது அருந்துவோர் விரும்பும், மது வகைகள் அதிக அளவில் அனுப்பப் படுகிறது.
பெரும்பாலான கடைகளில் மேற்பார்வையா ளர்கள் மது வகை கம்பெனி பிரதிநிதிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு உயர் ரக சரக்குகளை அதிக அளவில் போடுகின்றனர்.
உயர் ரக சரக்குகள் அதிக அளவில் போடும் மேற்பார்வை யாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு பணம் இல்லா மருத்துவ வசதி வழங்கப்பட்டுள்ளது. அதே போல டாஸ்மாக் பணி யாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கூறி உள்ளனர்.