மகுடஞ்சாவடி:
சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த இடங்கணசாலை பேரூராட்சி கடந்த மாதத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பேரூராட்சியாக இருந்தபோது இங்கு மொத்தம் 18 வார்டுகள் இருந்தன. தற்போது கூடுதலாக 9 வார்டுகள் சேர்க்கப்பட்டு நகராட்சியில் 27 வார்டுகளாக அமைக்கப்பட்டுள்ளது.
இதில் பாப்பாபட்டி, பாப்பாபட்டி காட்டுவளவு, மேற்கு புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகள் பேரூராட்சியாக இருந்தபோது 13-வது வார்டாக இருந்தது. தற்போது நகராட்சியாக அறிவித்த பின்னர் 21-வது வார்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வார்டுக்கு கூடுதலாக பாப்பாபட்டி பகுதியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள காடையாம்பட்டி ஏரியை அடுத்து உள்ள பகுதியை சேர்த்ததற்கு பாப்பாபட்டி பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து வார்டு பகுதியை முன்பு இருந்ததுபோல சீரமைத்து தருமாறு நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.