உள்ளூர் செய்திகள்

தீ விபத்தில் வீடு எரிந்து நாசம்

சேலம் கிச்சிப்பாளையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடு எரிந்து நாசமானது.

சேலம்:

சேலம் கிச்சிப்பாளையம் பஜனை மடத்தெருவில் வாடகைக்கு   குடியிருந்து  வருபவர்  பழனிசாமி (வயது 60). இவர்  வசிக்கும்     வீட்டின் மாடியில் உள்ள அறையில்  பழைய பேப்பர் உள்பட  பொருட்களை  போட்டு வைத்திருந்தார்.  

இந்த நிலையில்  இன்று அதிகாலை அந்த பொருட்கள்  தீப்பிடித்து எரிந்தது.  இதனால் அந்த பகுதியே புகை மூட்டமாக காட்சி அளித்தது.  இதனை பார்த்த அந்த பகுதியினர்    செவ்வாய்ப்பேட்டை  தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள்  ஓடுகளால் ஆன   வீட்டில் மேற்கூரை எரிந்து நாசமானது.  இந்த   தீ விபத்துக்கு மின் கசிவு   காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து   கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.