உள்ளூர் செய்திகள்

மேச்சேரி அருகே கோவில் வளாகத்தில் மோட்டார்சைக்கிள் திருட்டு

மேச்சேரி அருகே கோவில் வளாகத்தில் மோட்டார்சைக்கிள் திருட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

மேட்டூர்:

மேச்சேரி அடுத்த தெத்திகிரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் தனக்கு சொந்தமான மோட்டார்சைக்கிளில் தெத்திகிரிப்பட்டி மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றார். 

அங்கு கோவில் வளாகத்தில் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு சாமி கும்பிட்டு விட்டு திரும்பி வந்தார். அப்போது அங்கு நிறுத்தி இருந்த தனது மோட்டார் சைக்கிளை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மேச்சேரி போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரன் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.