திருவிழாவில் பக்தர்கள் விமான அலகு குத்தி வந்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் அலகு குத்தி வந்த பக்தர்கள்

தாரமங்கலம் அருணாசலம் புதூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் அக்னி கரகம், அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகே அருணாசலம் புதூரில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.

விழாவை முன்னிட்டு அக்னி கரகம், பூங்கரகம், அலகு குத்துதல் .வாகனம் இழுத்தல், விமான அலகு என்று 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தாரமங்கலம் பஸ் நிலையம் அருகிலுள்ள தெப்பக்குளம் அருகில் இருந்து பக்தர்கள் ஊர்வல மாக சென்று அருணாசலம் புதூரில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் நிறைவு செய்தனர். 

இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.