சேலம்:
தமிழக வளி மண்டல மேல் அடுக்கு, கீழடுக்கு பகுதிகளில் நிலவும் சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, நாளை மறுநாள் (23-ந்தேதி) சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், தர்மபுரி மாவட்டங்களில் லேசான, மிதமான மழை பொழிவு இருக்கும்.
மேலும் 24-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். இந்த தகவலை சேலம் மாவட்ட வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.