மேட்டூர் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பூங்காவை சுற்றி பார்க்க சென்றனர். 
உள்ளூர் செய்திகள்

3 நாட்களுக்கு பிறகு மேட்டூர் பூங்கா மீண்டும் திறப்பு

3 நாட்கள் மூடப்பட்டிருந்த மேட்டூர் அணை பூங்கா இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

மாலை மலர்

மேட்டூர்:

கொரோனா தொற்று பரவலை தடுக்க பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மேட்டூர் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருக்கும்.

இதனால் மக்கள் கூடுவதை தவிர்க்க  மேட்டூர் பூங்காவில் கடந்த 31 ம் தேதி முதல் நேற்று வரை  3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 3 நாட்களுக்குப் பிறகு இன்று காலை முதல் மேட்டூர் பூங்காவில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.