உள்ளூர் செய்திகள்

கன்னங்குறிச்சியில் கிணற்றில் மிதந்த ஆண் பிணம்

சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் விவசாய கிணற்றில் ஒன்று ஆண்பிணம் மிதந்து கிடந்தது. இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:

சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு  விவசாய கிணற்றில் 50 வயது மதிக்கத்தக்க ஆண்பிணம் இன்று மிதந்தது . 

இதனை பார்த்த அந்த பகுதியினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். பின்னர் கன்னங்குறிச்சி போலீசாருக்கு  தகவல் தெரிவித்தனர்.

உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அவரது உடலை கயிறு கட்டி மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். 

அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்?  என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT