பிணமாக மிதந்தவரை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

சேலம் ரெட்டியூர் புது ஏரியில் அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்பு

சேலம் ரெட்டியூர் புது ஏரியில் அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்கப்பட்டது.

மாலை மலர்

சேலம்:

சேலம் அழகாபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரெட்டியூர் புது ஏரியில் அழுகிய நிலையில் ஆண் பிணம் மிதப்பதாக அழகாபுரம் போலீசாருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று  பிணத்தை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவருக்கு 40 வயது இருக்கும். உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அந்த நபர் இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம்என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

அவர் எப்படி இறந்தார்? மர்ம நபர்கள் யாரேனும் கொலை செய்து பிணத்தை கொண்டுவந்து ஏரியில் வீசினார்களா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.