சேலம்,
ஐதராபாத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக மதுரை போலீஸ் கமிஷனர் செந்தில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கஞ்சா கும்பலை கண்டுபிடிக்க, குற்றப்பிரிவு போலீசாரை கமிஷனர் முடுக்கி விட்டார்.
கஞ்சா கடத்தியவர்கள் சேலத்தில் இறங்குவதாக மதுரை குற்றப்பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது. இது பற்றி போலீசார் சேலம் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சேலம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்& இன்ஸ்பெக்டர்கள் கோபண்ணா, தியாகப்பிரியன், சங்கர நாரயணன், ஏட்டுகள் பழனி குமார், வரதராஜன், ரவி பாண்டி, சேக் அப்துல் காதர் சேலம் ரெயில்வே சிறப்பு பிரிவு போலீசார் ராமன், கண்ணன், சென்ன-கேசவன், சதீஷ்குமார், ஆகியோர் ரெயிலில் அதிரடி சோதனை செய்தனர்.
அப்போது எஸ்&5 பெட்டியில் இருந்த மதுரை தெற்கு முத்துப்பட்டி 1&வது தெருவை சேர்ந்த கண்ணன் (வயது 45), அவருடைய மனைவி சித்ரா உள்ளிட்ட 3 பேர் சுமார் 22 கிலோ கஞ்சா கொண்டு வந்ததை கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்தனர். அவர்களை கைது செய்து, சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.