உள்ளூர் செய்திகள்

தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு

தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழில் திருத்தம் செய்து கொள்ள வருகிற 2-ந் தேதி கடைசி நாளாகும்.

சேலம்:

தமிழக அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை யின் சேலம் மண்டலத்தில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 4 மாவட் டங்கள் இடம் பெற்றுள்ளன.  இம்மாவட்டங்களில் உள்ள 8 அரசு ஐ.டி.ஐ.க்கள் மற்றும் தனியார் ஐ.டி.ஐ.க் களில் ஏராளமான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் ஏற் கனவே படித்து முடித்து தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் தங்களது  தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழில் (என்.ஏ.சி.)  திருத்தம் இருந்தால் அதனை சரி செய்து கொள்ள மத்திய அரசு கடைசி வாய்ப்பு வழங்கி உள்ளது.

அதாவது, தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழில் (என்.ஏ.சி.)  உள்ள பயிற்சியாளரின் பெயர், தந்தையின் பெயர், தாயாரின் பெயர், புகைப்படம் மற்றும் தொழிற்பிரிவின் பெயர் ஆகியவற்றை சரி செய்து கொள்ள வருகிற 2ம் தேதிக்குள் அரசு இணையதளம் குறைதீர்க்கும் தளத்தில் நேரடியாக  விண்ணப்பிக்கலாம்.

 அல்லது மாவட்ட உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில்  நேரடியாக சென்று தெரிவித்து பயன்பெறுமாறு சேலம் மண்டல பயிற்சி இணை இயக்குநர் ராஜகோபாலன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT